22 மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக’ அறிவிப்பு



டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் பாதிப்பினால் நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் தேசிய அனர்த்தப் பகுதிகளாக அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவுகள் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின்படி இந்த வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானியை பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.




புதியது பழையவை